www.garudabazaar.com

பிரபல இயக்குநரின் பண்ணை வீட்டில் கார்த்தி.. சூரி.. கருணாஸ் திடீர் சந்திப்பு!.. Trend ஆகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகும்‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Karthi Soori Karunas manoj in Bharathiraja formhouse trending

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் தேனி பகுதிகளில் நடந்து வருகிறது. சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த தயாரிப்பின் கீழ், முன்னதாக நடிகர் கார்த்தி, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகும், ‘விருமன்’ திரைப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தற்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ளது. இதனிடையே தேனியில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, தேனியில் இருக்கும் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், நடிகர்கள் சூரி, கருணாஸ், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தேனியில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவின் பிரபல ஃபார்ம் ஹவுசில் கார்த்தி, சூரி, கருணாஸ் உள்ளிட்டோருடனான உற்சாகமான புகைப்படத்தை பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

நடிகர் கார்த்தி சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்திலான ‘விடுதலை’ படத்தில் நடிக்கிறார். நடிகர் கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் கடைசியாக ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Soori Karunas manoj in Bharathiraja formhouse trending

People looking for online information on Aditi Shankar, Bharathiraja, Karthi, Karunas, Manoj Bharathiraja, Soori, Trending, Viruman will find this news story useful.