www.garudabazaar.com

"அப்பாவே திரும்ப வந்திருக்கார்!".. பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு பிறந்த ஆண்குழந்தை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

popular biggboss tamil winner blessed with boy baby emotional

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியும் அதன் சுவாரஸ்ய உளவியலும், பலருக்கும் அதை முதன்மையான நிகழ்ச்சியாக பார்க்கத் தூண்டுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் சீசனில் வெற்றி பெற்றவர்தான் ஆரவ். மாடலிங் துறையில் இருந்து, பின்னர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் ஆரவ். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அனைவரின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஆரவ், இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னராக உருவெடுத்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ராகி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆரவ், தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி இருக்கிறார். ஆரவ் மற்றும் ராகி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆரவ், 11 மாதம் கழித்து தனது அப்பாவே தனக்கு மகனாய் திரும்பி கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.

நடிகர் ஆரவ் முன்னதாக சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதேபோல் ஓகே கண்மணி படத்திலும், ஆரவ் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். மேலும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ராஜபீமா உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஆரவ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

popular biggboss tamil winner blessed with boy baby emotional

People looking for online information on Aarav, Biggboss, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5 will find this news story useful.