Beast Others
www.garudabazaar.com

”சன்னி லியோன் ரசிகர்களுக்கு மட்டும் ஆஃபர்… 3 கண்டிஷன்தான்”… வைரலாகும் கோழிக் கடைகாரர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கர்நாடகாவில் சன்னி லியோனின் ரசிகர் ஒருவர் சக ரசிகர்களுக்கு தனது கடையில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்.

Karnataka chicken shop owner exciting offer for Sunny leone fans

Also Read | செம்ம... சர்வதேச இசைக்கலைஞர்களின் சங்கமம்… ரஹ்மானின் maajja நடத்தும் ‘யாழ்’ இசைத் திருவிழா

இந்திய சினிமாவில் சன்னி லியோன்…

போர்னோகிராபி நடிகையான சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி தற்போது இந்திய படங்களில் நடித்து வருகிறார். முதலில் பாலிவுட் படங்களில் அவருக்கு கவர்ச்சி வேடங்கள் கிடைத்து வந்தன. தொடரந்து பல படங்களில் நடித்த அவர் இப்போது முக்கிய வேடத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவரைக் கதாநாயகியாக வைத்து வீரமாதேவி என்ற படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Oh My Ghost…

அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவர் நடிப்பில் oh my ghost என்ற படம் உருவாகி வருகிறது. VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K.சசிகுமார் வழங்க, சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா , மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த போஸ்டரை வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் வெளியிட்டனர்.

Karnataka chicken shop owner exciting offer for Sunny leone fans

சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர்கள்….

சன்னி லியோனுக்கு இந்தியாவில் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் அவர் கேரளாவுக்கு ஒரு கடைதிறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள சென்ற போது அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் கூடியதால் டிராபிக் ஜாம் ஆனது. அதுபோலவே சமீபத்தில் ஒரு ரசிகர் சன்னி லியோனின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்துப் பகிர்ந்து இருந்தார் அவர்.

Karnataka chicken shop owner exciting offer for Sunny leone fans

கோழிக்கடைகாரரின் சிறப்பு சலுகை…

இந்நிலையில் கர்நாடகாவின் மாண்டியா நகர்ப்பகுதியில் கோழிக் கறிக்கடை வைத்திருக்கும் பிரசாத் என்ற சன்னி லியோன் ரசிகர் சக சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார். ஆனால் அந்த சலுகைப் பெற  மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். அந்த நிபந்தனைகளை ஈடு செய்யும் ரசிகர்களுக்கு தன்னுடைய கடையில் வாங்கும் கோழி கறிக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளார்.

Karnataka chicken shop owner exciting offer for Sunny leone fans

அவரின் மூன்று நிபந்தனைகள்

1. சன்னி லியோனை டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைதளப் பக்கங்களிலும் பாலோ செய்துகொண்டிருக்க வேண்டும்

2. குறைந்த பட்சம் 10 சன்னி லியோன் புகைப்படங்கள் செல்போனில் இருக்க வேண்டும்.

3. சமூகவைதளங்களில் சன்னி லியோன் பதிவேற்றும் எல்லா புகைப்படங்களையும் லைக் செய்து கமெண்ட் செய்திருக்க வேண்டும்

பிரசாத்தின் இந்த நூதனமான அறிவிப்பு அவரை அப்பகுதியில் பிரபலமாக்கியுள்ளதாகவும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிககி அதிகமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read | “திரும்ப வர்றேன்”… மாநாடு டிவி பிரீமியர்... பிரபல சேனலின் தெறிக்க விடும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Karnataka chicken shop owner exciting offer for Sunny leone fans

People looking for online information on Karnataka, Karnataka chicken shop owner, Sunny Leone, Sunny leone fans will find this news story useful.