Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

கர்ணனின் "பண்டாரத்தி புராணம்"... தேவாவின் குரலில், தனுஷ் கிழித்து தொங்கவிடும் பாடல் வெளியானது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

karnan film second single released கர்ணனின் "பண்டாரத்தி புராணம்" பாடல்

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கர்ணன் படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. லிருந்து இரண்டாம் சிங்கிளான 'பண்டாரத்தி புராணம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற பாடகர் தேவாவின் குரலில் இந்த பாடல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க" பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்திலிருந்து இரண்டாம் சிங்கிளான 'பண்டாரத்தி புராணம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற பாடகர் தேவாவின் குரலில் இந்த பாடல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Karnan

karnan film second single released கர்ணனின் "பண்டாரத்தி புராணம்" பாடல்

People looking for online information on Karnan will find this news story useful.