கர்ணன் திரைப்படத்திலிருந்து புல்லரிக்கும் போட்டோவை வெளியிட்ட இயக்குனர்.. செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dhanush still from karnan movie கர்ணன் திரைப்படத்திலிருந்து தனுஷ்

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கர்ணன் படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் படம் வெளியாக இருக்கிறது.

dhanush still from karnan movie கர்ணன் திரைப்படத்திலிருந்து தனுஷ்

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனது டிவிட்டர் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனுஷ் கதறி அழுவது போல் இருக்கும் அந்த புகைப்படம் பார்க்கும் பொழுதே  புல்லரிக்கிறது. கர்ணன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையி.ல் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

dhanush still from karnan movie கர்ணன் திரைப்படத்திலிருந்து தனுஷ்

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj will find this news story useful.