Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

அடுத்தடுத்து அதிரடி... கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்... நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dhanush gives exiting news about karnan கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கர்ணன் படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உலகமெங்கிலும் கர்ணன் படம் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க" பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்ற செய்தியை அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Tags : Dhanush, Karnan

தொடர்புடைய இணைப்புகள்

dhanush gives exiting news about karnan கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்

People looking for online information on Dhanush, Karnan will find this news story useful.