IRAVIN NIZHAL
www.garudabazaar.com

இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்.. 'எமர்ஜென்சி' படத்தின் அசரவைக்கும் FIRST LOOK டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ள எமர்ஜென்சி படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Kangana Ranaut Emergency Movie First Look Teaser

Also Read | பிரபல சினிமா தயாரிப்பாளர் VELS ஐசரி கணேஷின் தாயார் மறைவு

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.

சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார்.

Kangana Ranaut Emergency Movie First Look Teaser

கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சிக்கான முன் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஈடுபட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் BTS புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இன்று இப்படத்தின் முதல் லுக் டீஸர் வெளியாகி உள்ளது. அச்சு அசலாக இந்திரா காந்தி தோற்றத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் இந்திரா காந்தி குரலில் டப்பிங் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Kangana Ranaut Emergency Movie First Look Teaser

கங்கனா ரனாவத் எமர்ஜென்சி படத்துக்காக புகழ்பெற்ற செயற்கை மேக்கப் கலைஞர் டேவிட் மலினோவ்ஸ்கியைப் படக்குழுவில் இணைத்துள்ளார்.

டேவிட் மலினோவ்ஸ்கி 2017 ஆம் ஆண்டு திரைப்படமான Darkest Hour இல் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான 2018 ஆம் ஆண்டிற்கான BAFTA மற்றும் ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவரது பிற படங்களான World War Z (2013) மற்றும் தி பேட்மேன் (2022) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! அப்படி போடு

இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்.. 'எமர்ஜென்சி' படத்தின் அசரவைக்கும் FIRST LOOK டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut Emergency Movie First Look Teaser

People looking for online information on Emergency Movie, Emergency Movie First Look Teaser, Kangana Ranaut will find this news story useful.