பிரபல கல்வியாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

Also Read | BREAKING: அஜித் பட இயக்குனருடன் அடுத்த படத்தில் இணையும் அருண் விஜய்? ஆஹா.. ஷூட்டிங் எப்போ?
தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) அவர்கள் இன்று (14/07/2022) காலை 9:30 மணி வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.
அவர்களின் இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு முகவரி: Dr. Ishari K. Ganesh , No 5/109 D, Bharathi Avenue, Injambakkam, Chennai - 600115
ஐசரி கணேஷ், 1992 முதல் 11 படங்களில் துணை வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக ஷங்கரின் 2.0 (2018) படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
வாக்கு மூலம் (1991), தேவி (2016), போகன் (2017), சம்டைம்ஸ்(2018), ஜூங்கா (2018), LKG (2019), தேவி 2 (2019), கோமாளி (2019), பப்பி(2019), எனை நோக்கி பாயும் தோட்டா (2019), சீறு(2020), மூக்குத்தி அம்மன் (2020), குட்டி ஸ்டோரி (2021), சுமோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ, ஜோசுவா இமை போல் காக்கா, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
Also Read | BREAKING: கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே