Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

விக்ரம் டூ இந்தியன்-2 TRANSFORMATION.. விலையுயர்ந்த காரை டிரெய்னருக்கு பரிசளித்த கமல்ஹாசன்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது Fitness டிரெய்னருக்கு விலையுயர்ந்த காரை கமல்ஹாசன் பரிசாக அளித்துள்ளார்.

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். 

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார்.

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

விக்ரம் படத்தை அடுத்து கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் துவங்கி உள்ளது.

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

கமல்ஹாசன் தாடி இல்லாமல் முறுக்கு மீசையுடன் புதிய லுக்கில் காட்சியளிக்கிறார் ‌. விக்ரம் படத்தின் லுக்கில் இருந்து இந்தியன் 2 படத்தின் லுக்கிற்கு கமல்ஹாசனை மாற்ற பயிற்சி அளித்த ஃபிட்னஸ் டிரெய்னர் ஒலிம்பியா சூரிக்கு கமல்ஹாசன் ரெனால்ட் க்வீட் காரை பரிசாக அளித்துள்ளார்.

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Hassan with his fitness trainer Olympia Suri

People looking for online information on Indian 2, Kamal Haasan, Vikram will find this news story useful.