www.garudabazaar.com

ATV பைக்கில் ரைடு வரும் லோகேஷ் கனகராஜ்! வைரலாகும் விக்ரம் படத்தின் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

kamal haasan vikram movie latest BTS image went viral

சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு படப்பிடிப்புக்கு காரைக்குடி சென்றது.அங்கு முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

kamal haasan vikram movie latest BTS image went viral

சில தினங்களுக்கு முன் பகத் பாசில், விஜய் சேதுபதி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்பொழுது எடுத்த BTS புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் விக்ரம் படத்தின் பாண்டிச்சேரி படப்பிடிப்பின் நடுவே கடற்கரை மணலில் ATV பைக்கில் சண்டை பயிற்சி இரட்டை இயக்குனர்கள் அன்பறிவ் உடன் லோகேஷ் கனகராஜ் ஜாலியாக செல்லும் BTS புகைப்படம் வைரகாகி வருகிறது.

kamal haasan vikram movie latest BTS image went viral

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார். 

kamal haasan vikram movie latest BTS image went viral

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. 

kamal haasan vikram movie latest BTS image went viral

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.