www.garudabazaar.com

BREAKING: கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் அடுத்தக்கட்ட மாஸ் அப்டேட்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Breaking KamalHassan’s Vikram 2nd schedule shooting update

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார்.

Breaking KamalHassan’s Vikram 2nd schedule shooting update

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

Breaking KamalHassan’s Vikram 2nd schedule shooting update

சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியது.  இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று (19.09.2021) மீண்டும் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Breaking KamalHassan’s Vikram 2nd schedule shooting update

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.