Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

VIDEO: BIGGBOSS சீசன்- 6 ல போட்டியாளராக G. P. முத்துவா? இது வேற மாரி இருக்குமே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து பங்கேற்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kamal Haasan BIGGBOSS Season 6 Tamil Contestant G P Muthu Sources

Also Read | விஷால் நடிக்கும் "மார்க் ஆண்டனி".. வித்தியாசமான கேங்ஸ்டர் லுக்கில் S.J. சூர்யா! செம்ம போஸ்டர்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kamal Haasan BIGGBOSS Season 6 Tamil Contestant G P Muthu Sources

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார். மேலும் போட்டியாளர்கள் செய்த செயல்களை விமர்சிப்பார். வாராவாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தகங்களையும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பரிந்துரைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.  முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்நிலையில் 6வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Kamal Haasan BIGGBOSS Season 6 Tamil Contestant G P Muthu Sources

இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். முதல் முறையாக பொது மக்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | இளம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்..!! பொண்ணு இவங்கதான்.! ஃபோட்டோவுடன் வெளியான அறிவிப்பு.!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan BIGGBOSS Season 6 Tamil Contestant G P Muthu Sources

People looking for online information on Bigg Boss season 6 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, BIGGBOSS Season 6 Tamil Contestant, GP MUTHU, Kamal Haasan, Vijay Television will find this news story useful.