Reliable Software
www.garudabazaar.com

சைலண்ட்டா ஒரு சம்பவம் பண்ணிய காஜல், யோகி பாபு!.. தெறிக்கும் 'கோஸ்டி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு தேவா, ஹன்சிகா, ரேவது நடிப்பில் உருவான திரைப்படம் குலேபகாவலி. காமெடியாகவுன் அட்வென்ச்சுர் படமாகவும் ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தை இயக்கியவர் கல்யாண்.

Kajal Aggarwal yogi babu ghosty firstlook tamannaah

இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கல்யாண் இயக்கிய திரைப்படம் ஜாக்பாட். ஜோதிகா,ரேவதி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரனை வைத்து தெறிக்கவிடும் காமெடியில் உருவான இந்த படம் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு வித்தியாசமான ஜோதிகாவை காண முடிந்தது.

Kajal Aggarwal yogi babu ghosty firstlook tamannaah

இதனைத் தொடர்ந்து இயக்குநர் கல்யாண், காஜல் அகர்வாலை வைத்து இயக்கியுள்ள கோஸ்டி திரைப்படத்தின் தரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காணும்போது, ஒரு அரசியல் சம்பவம் படத்தில் இருக்கிறது என்பது புரிகிறது.

இதேபோல் இப்படத்தில் காஜலின் அருகில் யோகிபாபு அமர்ந்திருப்பதை பார்க்கும்போதும் படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்பதும் தெரிகிறது. தவிர கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுரேஷ் மேனன்,  தங்கதுரை, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சத்யன், ஸ்ரீமன், சுப்பு பஞ்சு, மனோபாலா, அஜய் ரத்தினம் என நட்சத்திர பட்டாளமே இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால் நிச்சயம் இப்படம் ஒரு ஜனரஞ்சகமான படம் என்பது தெரிகிறது.

ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

ALSO READ: ‘தமிழ்ப் படம்’ இயக்குநரின் அடுத்த பட ஹீரோ... இவர் படத்துல ‘பாசிடிவ்’ டைட்டிலா? வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal yogi babu ghosty firstlook tamannaah

People looking for online information on Gulaebaghavali, Jackpot, Kajal Aggarwal, Kalyaan S, Yogi Babu will find this news story useful.