'காதலர் தினம்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. 'காதலர் தினம்' படமும், அதன் பாடல்களும் இன்று வரை ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
அதனைத் தொடர்ந்து அர்ஜூனுடன் 'கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் வருடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். வெறும் 30 சதவீதம் மட்டுமே பிழைக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் தன் மன உறுதியின் காரணமாக கேன்சர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் அவ்வப்போது நம்பிக்கைகுரிய பதிவுகளை எழுதி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பில் உலகமே தவித்து வருவதால் சோனாலி பிந்த்ரே பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியம் என்பது இப்பொழுது புரிந்திருக்கும். நான் கேன்சரால் பாதிக்கப்பட்டபோது, என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள பல்வேறு சோதனைகளை மேற்கொண்டேன். தற்போது எனக்கு அது பழக்கமாக மாறிவிட்டது.
அவற்றை உங்களுக்கு கூற விரும்புகிறேன். இது சீக்ரெட் ஃபார்முலா இதனை பின்பற்றி நீங்கள் உங்கள் சக்தியை பெருக்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்த அவர், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.