Breaking - நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிடப்போவது யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விஷால் அணியினருக்கு எதிராக போட்டியிடப்போவது யார் என்பது குறித்த தகவல் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.

Ishari K Ganesh will compete Vishal in upcoming Nadigar Sangam Election

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், விஷால் அணியினர் தரப்பில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படாததால் சங்க உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட புரொமோஷன் விழாவில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷாலுக்கு தனது ஆதரவு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் ஆர்.கே.சுரேஷ் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, நடிகர் சங்கத்தில் எனது உறுப்பினர் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிட முடியாது என்றார்.

மேலும், இது குறித்து பேசிய அவர், ‘நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட விஷாலுக்கு ஆதரவாக செயல்பட்ட பலரும் அவர்களது நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ளனர். கடந்த தேர்தலின் போது விஷாலின் வெற்றிக்கு பலரும் உறுதுணையாக இருந்தோம். பதவிக்கு வந்த பிறகு விஷால் தரப்பில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கு இந்த தேர்தலில் ஆதரவளிக்கப்போவதில்லை என முடிவு செய்திருக்கிறோம்’.

‘விஷால் அணிக்கு எதிராக போட்டியிட வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளார் ஐசரி கணேஷ் தான் சரியானவர். தன்னுடன் இன்னும் சில சங்க உறுப்பினர்கள் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவளிக்கவிருக்கிறோம். கடந்த நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷிற்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது அவரே விஷால் அணிக்கு எதிராக போட்டியிடுகிறார். ஐசரி கணேஷ் பதவிக்கு வந்தால், சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கும், சங்க உறுப்பினர்களின் நலனிற்கும் உழைப்பார் என நம்புகிறோம்’ என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.