தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் அப்படம் குறித்தும், வரவிருக்கும் நடிகர் சங்க தேர்தல் குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், தன்னால் எந்த பதிவிக்கும் போட்டியிட முடியாது. நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷாலை தவிர்த்து வேறு அனைவருகும் ஆதரவு தெரிவிப்பேன். விஷாலுடன் இருந்த நடிகர் உதயா உள்ளிட்ட சிலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பேன். விஷால் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட ஆளும் இல்லை என்றார்.
நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம், ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள் எதுவும் சேரவில்லை. மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும். அவரை நடிக்க அனுமதியுங்கள் என்றார்.
'பில்லா பாண்டி' பட விவகாரத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், 'பில்லா பாண்டி' படத்தின் கதை நன்றாக
இருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு வருத்தமளித்தது, அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.