பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர். அப்போது அவர், "தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை ஓய்வுபெற்ற நீதிபதி அறிவிப்பார். தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்றார்