www.garudabazaar.com

விஜய் கூட வில்லனா நடிக்கனும்! இப்படி சொன்ன சார்பட்டா பரம்பரை நடிகர் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். 

i want act with vijay as villain says sarpatta parambarai actor

இந்த படத்தில், குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்க, பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

i want act with vijay as villain says sarpatta parambarai actor

எழுபதுகளில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள் படத்தின் மையமாக அமைந்துள்ளன.

மேலும் மூன்று விதமான உடல் மொழிகளுடன் தமது 30வது படமான இந்த படத்தின் கபிலன் கேரக்டருக்காக, ஆர்யா தமது உடலை உடற்பயிற்சி செய்து குத்துச் சண்டை வீரருக்கான உடற்கட்டுடன் உருமாற்றி நடித்துள்ளார். 

i want act with vijay as villain says sarpatta parambarai actor

இந்த படம் பற்றி நடிகர் ஆர்யா அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யுடன் வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். தற்போது விஷாலுக்கு எதிராக 'எனிமி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆர்யா.

ALSO READ: 'மெட்ராஸ் குத்துச்சண்டை' வரலாறை Commercial-ஆக பேசும்... 'சார்பட்டா பரம்பரை' - திரை விமர்சனம்.

விஜய் கூட வில்லனா நடிக்கனும்! இப்படி சொன்ன சார்பட்டா பரம்பரை நடிகர் யார் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

i want act with vijay as villain says sarpatta parambarai actor

People looking for online information on Ariya, Sarpatta Parambarai, Sarpatta Parambarai Tamil, Vijay will find this news story useful.