www.garudabazaar.com

Vijay: சொகுசு கார் மேல் முறையீட்டு வழக்கு.. உயர்நீதிமன்றத்தின் அடுத்த பரபரப்பு உத்தரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மீது நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு கோரியிருந்தார்.

HC order over vijay appeal regarding rolls royce entry tax case

இதனால் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துடன், வரி கட்டுவது கட்டாயம், உச்ச நட்சத்திரங்கள் ரியல் வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிமன்ற நகல் வெளியிடப்பட்டது.

நடிகர் விஜய் 2011-12 ஆம் ஆண்டில் இந்த காரை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில் இப்படி ஒரு உத்தரவை நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம்  பிறப்பித்திருந்தார். அத்துடன் இந்த அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விஜய் வழக்கு - பட்டியலிட உத்தரவு:

இந்நிலையில் தான் வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் தற்போது ஏற்றுள்ளது.

அத்துடன், தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

HC order over vijay appeal regarding rolls royce entry tax case

People looking for online information on ActorVijay, விஜய், Vijay, Vijay rolls royce, Vijaycase will find this news story useful.