www.garudabazaar.com

"அருள்நிதி15".. 'வேற லெவல்' போஸ்டருடன் வெளியான வித்தியாசமான 'டைட்டில்' லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி நடிக்கும் 15வது திரைப்படத்துக்கு “D பிளாக்” என பெயர் வைக்கப்பட்டதுடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Arulnithi15 DBlockFirstLook released vijay kumar rajendran

YouTube-ல்  ‘எரும சாணி’ தொடர் மூலம் புகழ் பெற்றவர் விஜய் குமார் ராஜேந்திரன். இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது “D பிளாக்” படம் மூலம், இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தமது  MNM Films சார்பில் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் இசையமைக்கிறார். சண்டை இயக்குனராக பிரதீப் தினேஷ் பணியாற்றுகிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர், அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இந்த படம் இருக்கும் என்றும், கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை இந்த படம் கண்டிப்பாக ஈர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும்  B.சக்திவேலனின் Sakthi Film Factory நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'விஜய் சேதுபதி' வெளியிட்ட 'அருள்நிதி' நடிக்கும் 'தேஜாவு' படத்தின் 'அசத்தல்' first look! 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arulnithi15 DBlockFirstLook released vijay kumar rajendran

People looking for online information on Arulnithi15FirstLook, DBlock, DBlock DBlockFirstLook VijayKRajendran, Ron Ethan Yohaan will find this news story useful.