ஆபத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும். ஹேன்ட் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை வைரஸ் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் சானிடைசரை அதிக விலைக்கு விற்கின்றனர். இது தொடர்பாக நடிகர் பால சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில்“கொரோனாவை விட மனிதன் கொடூரமானவன். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேன்ட் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு போனேன். 60 ருபாய் சானிடைசரை 135 ரூபாய் என்று விலை சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு 'நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்' என கடையில் இருந்தவர் கூறினார்.
இன்று ஒரு காபி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தோம். அங்கு பணியுரியும் பெண்ணும் அப்படித்தான் சொன்னார்கள். என்னை போன்றே அநேகர் புலம்பிவருகின்றனர். அவசர சூழ்நிலையில் இலவசமாக கொடுக்க வேண்டிய பொருட்களை இப்படி அநியாய இலாபத்திற்கு விற்பது சரியில்லை” என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
#கொரோனா வை விட ஆபத்தானவன் மனிதன்...#மனிதகொரோனா pic.twitter.com/gpiZBN3ljf
— Bala saravanan actor (@Bala_actor) March 20, 2020