www.garudabazaar.com

ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானாம்! அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Hansika Motwani to marry business man sohail kathuria

Also Read | 'கைதி' இந்தி ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்.. எந்த கேரக்டரா இருக்கும்? செம தகவல்

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.

ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறியப்பட்டார். பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

Hansika Motwani to marry business man sohail kathuria

தற்போது இயக்குனர் மனோஜ் தாமோதரனின்  பார்ட்னர் படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார்.  இந்த அறிவியல் புனைவு வகைமை படத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Hansika Motwani to marry business man sohail kathuria

இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஓம்காரின் மை நேம் இஸ் ஸ்ருதி படத்திலும் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். வைஷ்ணவி ஆர்ட்ஸ் பேனரின் கீழ் நாகேந்தர் ராஜுவுடன் இணைந்து ரம்யா புருகு தயாரித்துள்ள இந்த படத்திற்கு மார்க் கே ராபின் இசையமைத்துள்ளார்.மேலும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றும் தயாராகி வருகிறது.

Hansika Motwani to marry business man sohail kathuria

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தொழில் அதிபர் சோஹைல் கதுரியாவுடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம்  முன்பு போட்டோ ஷூட் நடத்தி, தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் Marry Me என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா காதலை சொல்வது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. சோஹைல், மும்பையை மையமாக வைத்து இயங்கும் தொழில் அதிபர் ஆவார்.

Hansika Motwani to marry business man sohail kathuria

ஹன்சிகாவின் திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Also Read | தளபதி 67 படத்தில் இணையும் பிரபல நடிகை? வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Hansika Motwani to marry business man sohail kathuria

People looking for online information on Hansika, Hansika Motwani, Hansika Motwani to marry business man, Sohail kathuria will find this news story useful.