www.garudabazaar.com

படு ஜோராக நடந்த நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம்.. வாழ்த்தும் ரசிகர்கள்.. Viral Pics!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

hansika motwani got married in jaipur viral pics

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

hansika motwani got married in jaipur viral pics

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்ய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோரின் திருமணம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றுள்ளது.

hansika motwani got married in jaipur viral pics

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

hansika motwani got married in jaipur viral pics

முன்னதாக, தனது கணவர் சோஹேலுடன் ஹன்சிகா நடனமாடி அசத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க ஜாலியாக பல்வேறு அமர்க்களமான நிகழ்வுகளுடன் ஹன்சிகாவின் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

hansika motwani got married in jaipur viral pics

தொடர்புடைய இணைப்புகள்

hansika motwani got married in jaipur viral pics

People looking for online information on Hansika Motwani, Marriage will find this news story useful.