www.garudabazaar.com

வருங்கால கணவருடன் டான்ஸ்.. வெட்கத்தில் சிரித்த ஹன்சிகா! அசத்தல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது வருங்கால கணவருடன் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Hansika Motwani dancing with Sohael Khaturiya Viral video

Also Read | துணிவு படத்தில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ்ட் இவரா? விஜய் & தனுஷ் கூட மட்டும் இத்தனை படமா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர்.

பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

Hansika Motwani dancing with Sohael Khaturiya Viral video

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

Hansika Motwani dancing with Sohael Khaturiya Viral video

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

Hansika Motwani dancing with Sohael Khaturiya Viral video

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது வருங்கால கணவருடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. திருமணத்திற்கு முந்தைய வைபவங்களில் ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் இணைந்து ஆடியுள்ளார். மேலும் இந்த வைபவத்தின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Also Read | 'துணிவு' படத்தின் மூன்றாவது லுக்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் மிரட்டல் போஸ்டர்!

வருங்கால கணவருடன் டான்ஸ்.. வெட்கத்தில் சிரித்த ஹன்சிகா! அசத்தல் வீடியோ வீடியோ

Hansika Motwani dancing with Sohael Khaturiya Viral video

People looking for online information on Hansika, Hansika Motwani, Hansika Motwani dancing with Sohael Khaturiya, Sohael Khaturiya will find this news story useful.