www.garudabazaar.com

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஜல்சா' படத்தின் வேற லெவல் அப்டேட்! Exclusive புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜேஷ் நடிக்கும் 'ஜல்சா' படத்தை பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’  படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்குகிறார்.

grand shoot of Jalsa movie prabhudeva aishwarya rajesh

இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.  ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு தேவாவுடன் யோகிபாபு, தேவ தர்ஷினி சேத்தன் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகம் இசையமைக்கிறார். பாண்டிச்சேரி, சென்னை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

grand shoot of Jalsa movie prabhudeva aishwarya rajesh

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை EVP பிலீம் சிட்டியில் நடைபெற்று வந்தது. ஒரு முக்கிய பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

grand shoot of Jalsa movie prabhudeva aishwarya rajesh

பிரபுதேவா தற்போது பொன்மாணிக்கவேல், யங் மங் சங், ஊமை விழிகள், பகீரா, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக், டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

grand shoot of Jalsa movie prabhudeva aishwarya rajesh

People looking for online information on Aishwarya Rajesh, Prabhu Deva will find this news story useful.