www.garudabazaar.com

ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்.. டிரைலரை பாராட்டிய இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘திட்டம் இரண்டு (Plan B)’ படத்தின்  ஓடிடி ரிலீஸ் அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

aishwarya rajesh Thittam Irandu SonyLiv Keerthi Suresh Praises

இந்நிலையில் தான், ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு (Plan B)’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த வருடம் விஜய் சேதுபதி, தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி த்ரில்லர் படமான இந்த படத்துக்கு சதீஷ் ரகுநாதன் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இந்த திரைப்படம் Sony Liv ஓடிடியில் வெளியாகும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். எனினும் படத்தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த படம் ஜூலை 30-ஆம் தேதி Sony Liv ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. 

Yours Shamefully மற்றும் Yours Shamefully 2.5 ஆகிய குறும்படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்,  சில வருடம் முன்பு அசார் நடிப்பில் வெளியான, ‘ஏண்டா தலையில எண்ணெய் வெக்கல’ என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த டிரைலரை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘செமையா இருக்கு’ என்று கூறியுள்ளார்.

இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் ரி-ட்வீட் செய்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபலமான மலையாளப் படமான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தின் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இதேபோல் டிரைவர் ஜமுனா என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

ALSO READ: யாஷிகா ஆனந்தின் Car விபத்தில் நடந்தது என்ன? பலி ஆன தோழி யார்? வெளியான பரபரப்பு Video!

தொடர்புடைய இணைப்புகள்

aishwarya rajesh Thittam Irandu SonyLiv Keerthi Suresh Praises

People looking for online information on Aishwarya Rajesh, Keerthi Suresh, SonyLIV, ThittamIrandu, Vignesh Karthik will find this news story useful.