www.garudabazaar.com

லிங்குசாமி இயக்கும் புதிய படம்! கீர்த்தி ஷெட்டியின் FIRST LOOK போஸ்டர்! எப்படி இருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“தி வாரியர்” படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியின் புதிய போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

first look of Krithi Shetty from Ram Pothineni-starrer The Warrior

OFFICIAL: யுவன் இசையில் வெற்றிமாறன் - அமீர் இணையும் புதிய படத்திற்கு பரபரப்பான புதிய பெயர்!

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களுள் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.

இரு மொழிகளில் உருவாகும்  இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது. தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுள்ளது

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி,  சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலக்‌ஷ்மி  எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

first look of Krithi Shetty from Ram Pothineni-starrer The Warriorr

முன்னதாக வெளியான ராம் பொத்தினேனி உடைய தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டைட்டில் லுக் போன்றே இந்த ஃபர்ஸ்ட் லுக்கும், ரசிகர்களிடம் நேர்மறை அதிர்வை பரப்புவதாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கோலாகலமான ஆக்சன் விருந்து காத்திருப்பது உறுதியாகியுள்ளது.

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘சீடிமார்’ படத்தினை தயாரித்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பு, “தி வாரியர்” என்பது குறிப்பிடதக்கது.

first look of Krithi Shetty from Ram Pothineni-starrer The Warrior

 

first look of Krithi Shetty from Ram Pothineni-starrer The Warrior

இப்படத்தில் ஆதி பினிஷெட்டி இதுவரை பார்த்திராத வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அக்‌ஷரா கௌடா மிக சுவாரஸ்யமான, முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

காதலர் தினத்தில் வெளியான ரொமாண்டிக் போஸ்டர்! இது தான் மாறன் படத்துல மாளவிகா மோகனன் பேர் போல!

first look of Krithi Shetty from Ram Pothineni-starrer The Warrior

People looking for online information on கீர்த்தி ஷெட்டி, தி வாரியர், லிங்குசாமி, Krithi Shetty, Ram Pothineni, The Warrior will find this news story useful.