www.garudabazaar.com

ஷங்கரைத் தொடர்ந்து #RAP019 ஷூட்டிங்கில் மூத்த தமிழ் இயக்குநர்!.. Trend ஆகும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார்.

Bharathiraja visits RAP019 shoot Ram Pothineni Lungusamy

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் பாராட்டிய பாரதிராஜா, அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாளை #RAP019 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படத்துக்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப்பயிற்சியையும்,  நவீன் நூலி படத்தொகுப்பினையும் மேற்கொள்கின்றனர்.

இந்த படத்துக்கான தெலுங்கு மொழி வசனத்தை சாய் மாதவ் புர்ராவும் மற்றும் தமிழ் மொழி வசனத்தை பிருந்தா சாரதியும் எழுதுகின்றனர். இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja visits RAP019 shoot Ram Pothineni Lungusamy

People looking for online information on Lingusamy, Ram Pothineni, RAP019 will find this news story useful.