''ரூ.25 லட்சம் உதவி பண்ணார்'' - ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் மக்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க வணிகம் உள்ளிட்வைகள் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைத்துறை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் , ரிலீஸ் தேதி ஆகியவை பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

FEFSI President and Director RK Selvamani's exclusive video on Coronavirus relief donation | ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வணி கொரோனா வைரஸிற்காக பெற்ற டொனே

இதன் ஒரு பகுதியாக திரைப்படப் பணியாளர்கள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். திரைப்பட பணியாளர் தினப்படி ஊதியம் பெறுபவர்கள் என்பதால் அவர்களது வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து FEFSI எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஏறக்குறைய பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் அறிக்கை மூலம் கொட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பல்வேறு திரைப்பட பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை பணமாகவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களாகவும் செய்து வருகின்றனர். நடிகர்கள் உதவி செய்யும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குநரும் ஃபெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மூனே முக்கால் கோடி ரூபாய் தேவைப்படுது. தற்போது இரண்டரை கோடி ரூபாய் கலெக்ட் ஆகியிருக்கு. இதுவரை 15,000 உறுப்பினர்களுக்கு அளித்து வருகிறோம். இன்னும் ஒன்றரை கோடி ரூபாய் பற்றாக்குறை  இருக்கு. இன்னும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கு.

தயவு செய்து தொழிலாளர்கள் மீது கருணை காட்டி உதவி செய்யுங்கள். சகோதரர்களாக, சகோதரிகளாக இருக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உதவி செய்யுங்கள். யானை சிந்துகின்ற சாதம் யானைக்கும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எறும்புக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஒரு மூட்டை அரிசி என்பது தொழிலாளர்களுக்கு ஒரு மாத உணவிற்கு வழிவகுக்கும்.

திரைத்துறையச் சேர்ந்த நண்பர் ஒருவர் ரூ.25 லட்சம் உதவி செய்திருக்கிறார். ஆனால் என்னுடைய பெயர் வெளியில் தெரிய வேண்டாம், அப்படி தெரிந்தால் நீங்கள் எனக்கு செய்யும் துரோகம் என்று கேட்டுக்கொண்டார்'' இவ்வாறு தெரிவித்தார்

''ரூ.25 லட்சம் உதவி பண்ணார்'' - ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தகவல் வீடியோ

Entertainment sub editor