"25 வாரம் ஓடும்பாங்க, 2 வாரம் கூட ஓடாது" - கமல் பட விழாவில் ரஜினி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1986-ஆம் ஆண்டு கவிதாலயா புரடெக்ஷன்ஸ் தயாரித்த படம் 'புன்னகை மன்னன்'. இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான இந்த படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது, இன்றுவரை உலகநாயகனின் மிகச்சிறந்த படங்களில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.

கமல் புன்னகை மன்னன் பட விழாவில் ரஜினி பேச்சு rajini speaks in kamal punnagai mannan success meet

இந்த நிலையில் 25 வருடங்கள் கழித்து புன்னகை மன்னன் பற்றிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. புன்னகை மன்னன் படத்தின் வெற்றி விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ தான் இப்பொழுது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில்  ரஜினியும் கமலும் இருவேறு பெரிய ஆளுமைகளாக கருதப்பட்டனர். இருவருக்கும் தனி தனியே பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த நிலையில் ஒரு பெரிய நடிகரின் படத்தை இன்னொரு நடிகர் பாராட்டி  பேசுவது அத்தனை சாதாரணமான விஷயம் அல்ல.

ரஜினிகாந்த் உலக நாயகனை பற்றி பேசும் போது புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அவர் "கமல் நடிகர்களுக்கெல்லாம்  நடிகர். புன்னகை மன்னன் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் முதல் காரணம் பாலச்சந்தர் அவருடைய இயக்கம் இரண்டாவது பெரிய காரணம் நடிகர் கமலின் அசாத்திய நடிப்பு தான். புன்னகை மன்னன் படத்தை சென்சார் போர்ட்டில் கடித்து குதறினர் அதற்குப் பின்னும் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் கமல் மட்டும்தான். அவர் நடித்த 'சாப்ளின் செல்லப்பா' கதாபாத்திரத்தை வேறு யாராலும் நடிக்க முடியாது, ஏன் யூகித்து கூட பார்க்க முடியாது. ஒரு சில  திரைப்படங்கள் இரண்டு வாரத்துக்கு ஓடும் என்று நினைப்போம், ஆனால் 25 வாரத்துக்கு ஓடும். எல்லாம் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது" என்று  அவர் பேசும்போது அவையில் மக்கள் ஆரவாரம் செய்கின்றனர் இந்த வீடியோ மீண்டும் கமல் ரஜினி நட்பிற்கும் பெருந்தன்மைக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

"25 வாரம் ஓடும்பாங்க, 2 வாரம் கூட ஓடாது" - கமல் பட விழாவில் ரஜினி...! வீடியோ

Entertainment sub editor