Reliable Software
www.garudabazaar.com

'வெறித்தனமான Fan-ஆ இருப்பாரோ?'... தளபதி விஜய் மாதிரியே சைக்கிளில் வந்த நபர்.. Viral ஆகும் வேறலெவல் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் குறித்த தேதியில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

fan cute act vijay cycle travel to voting தளபதி விஜய்

இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் முன்வந்து வாக்களித்தனர். இதில் நடிகர் விஜய் நேற்றைய தினம் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிற்கு அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் பயணம் செய்து சென்று வாக்களித்தார்.

சைக்கிளில் பயணம் செய்த விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு வாக்களிக்கச் செல்லும் பொழுது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்த படி அவருடனே சென்றனர். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகின. அதன் பின்னர் தமது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி இருந்ததால் கார் எடுத்து வரும்போது அங்கு வாக்களிக்க வரும் மற்றவர்களுக்கு அது இடையூறாக இருக்கும் என்று கருதிய விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க விஜய் முடிவு செய்ததாக விஜய் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இதனிடையே தளபதி விஜய் நேற்றைய தினம் வாக்களிக்க வந்த அதே பாணியில் இளைஞர் ஒருவர் ட்விட்டரில் செய்துள்ள அட்ராசிட்டி வீடியோவாக வலம் வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தவிர, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் வாக்களித்த கையோடு வெளிநாட்டுக்கு புறப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஜனநாயக கடமை முடிஞ்சுது.. அடுத்து ரசிகர்களுக்கான கடமை.. புறப்படும் விஜய்!.. முழு விபரம் இதோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

fan cute act vijay cycle travel to voting தளபதி விஜய்

People looking for online information on ThalapathyVijay, TNElections2021, Trending, Vijay, VijayCycle, VijayVoting, Viral video will find this news story useful.