நடிகை ராய் லக்ஷ்மிக்கு திருமணமா..? அவரே வெளியிட்ட திடீர் பதிவு... ஆனா உண்மை இதுதான்..!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபகாலமாக, கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, பல பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் கொடிய கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என முடிவுகள் வெளியாகி , சிகிச்சை பெற்று ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ராய் லட்சுமி. தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமணம் பற்றிய ஒரு திடீர் பதிவை வெளியிட்டார். ஆனாலும் அதிலிருந்து திருப்பத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நான் அவன் இல்லை 2, தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தற்பொழுது சிண்ட்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிறைய அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் "நீண்ட காலமாகவே என்னிடம் பலர் இதை கேட்டு வருகின்றனர், எனவே தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தேன். முதலில் நான் என் உறவை மறைக்கவில்லை, அது யாருடைய பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை, எனக்கு சில பிரைவசி தேவை மற்றும் என் துணைவர் நல்வாழ்வை பாதுகாக்க வேண்டும் . ஆமாம், கடந்த வாரம் நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளோம், நாங்கள் ஏப்ரல் 27, 2021 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கிறோம். அது எதிர்பாராத விதமாக நடந்தது. ஆனால் என் குடும்பம் அதை பற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் எனது காதலருடன் நான் எனது வாழ்க்கையை துவங்க காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் இந்த பதிவை வேறு ஒருவரிடமிருந்து நான் திருடியதற்குக் காரணம், உங்களிடம் கைகளை சரியாக கழுவுங்கள் மற்றும் சானிடைசர் பயன்படுத்துங்கள் என்பதே கூறுவதற்காக தான்" என்று அதிரடியாக டுவிஸ்ட் வைத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை துவங்கியுள்ளதால் அவர் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொள்ளாமல் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.