www.garudabazaar.com

புதிய படத்தில் தனுசுக்கு ஹீரோயினான வெளிநாட்டு நடிகை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஊட்டி: நடிகர் தனுஷ் உடன் பிரபல வெளிநாட்டு நடிகை ஜோடி சேர்ந்துள்ளார்.

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

NAANE VARUVEN: ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் தனுஷ் புதிய BTS புகைப்படம்! ரகிட.. ரகிட..

தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பு முடிந்துள்ளது.  யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார்.

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

படப்பிடிப்பின் இறுதிநாளில் தனுஷ், ஓம்பிரகாஷ், செல்வராகவன் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் இதனை அறிவித்துள்ளார். அதில்,"இறுதியாக உங்கள் அனைவருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன். எனது இணை நடிகர் தனுஷ், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வராகவன் சார் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோருடன் நானே வருவேன் படத்தில் எனது பங்கை முடித்தேன். ஆர்வமுள்ள, அன்பான மற்றும் ஆதரவான நபர்களின் இந்த அழகான படக்குழுவை மிகவும் மிஸ் பண்ண போகிறேன். இப்படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி"  என நடிகை எலிசெபத் கூறியுள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

ராமாக Dulquer.. சீதாவாக மிருணாள்.. போருக்கு நடுவே பூத்த காதல் கதை! பட டைட்டிலுடன் வெளிவந்த போஸ்டர்

தொடர்புடைய இணைப்புகள்

Elisabet Avramidou Granlund acted with dhanush for naane varuven movie

People looking for online information on Dhanush, Elisabet Avramidou Granlund, Elli AvrRam, Naane Varuven Movie will find this news story useful.