www.garudabazaar.com

அஜித் ஃபோட்டோ பகிர்ந்து விக்னேஷ் சிவனின் வைரல் இன்ஸ்டா பதிவு! குஷியில் AK ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அஜித் புகைப்படத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். 

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. போனிகபூர் Behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில், AK61 நெகட்டிவ் ரோல் பற்றிய கேள்விக்கு. ரசிகர்களாக முடிவு செய்ததாகவும், AK61 படம் Adventure ஆகவும், ரசிகர்களை ஆர்வத்தை கிளப்பும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

இந்நிலையில் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இச்சூழலில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

அந்த புகைப்படம் வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடலின் காட்சியுடன், "மேல இருக்குறவனை நம்ப நல்லா கத்துக்கோ" என்ற வரி அந்த போட்டோவில் பதிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Director Vignesh Shivan Instagram Story with Ajith Kumar Image

People looking for online information on Ajith Kumar, AK61, AK62, Anirudh, Instagram, Lyca, Nayanthara, Vignesh shivan will find this news story useful.