Pattamboochi

சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி…. சிங்கிள் ட்வீட்டில் Full stop வைத்த வெங்கட் பிரபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு வின் ட்வீட் ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Director venkatprabhu tweet got attention among vijay ajith fans

Also Read | கவனம் பெற்ற கங்கனாவின் ‘தாகத்’ … பிரபல ஓடிடி வெளியிட்ட பிரீமியர் அப்டேட்

வெங்கட் பிரபு …

சென்னை 28, சரோஜா,  மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது. இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த மன்மத லீலை திரையரங்குகளிலும் ஓடிடியிலும் நல்ல கவனம் பெற்றது.

அடுத்த படம்…

இந்த இரு படங்களுக்குப் பிறகு தற்போது வெங்கட் பிரபு  அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு குறித்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.  வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director venkatprabhu tweet got attention among vijay ajith fans

வெங்கட் பிரபு  இயக்கத்தில் விஜய், அஜித்?

இந்நிலையில் தற்போது சமூகவலைதளத்தில் ஒரு தகவல் தீயாகப் பரவியது. விஜய், அஜித் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் PAN இந்தியா திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல்கள் பரவின. மூவருமே தற்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ள நிலையில் இதற்கு சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல் ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்ட நிலையில் டிவிட்டரில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். ஆச்சர்யமாக பார்க்கும் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில் “எனக்கே தெரியாமல் இப்படி ஒரு தகவலா?” என்பது போல அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | “ஆசியாவிலேயே திறமையான இயக்குனர்…” நெல்சன் பிறந்தநாளில் விக்னேஷ் சிவனின் அன்பு வாழ்த்து

 

Director venkatprabhu tweet got attention among vijay ajith fans

People looking for online information on Director venkatprabhu, Venkatprabhu tweet, Vijay ajith fans will find this news story useful.