www.garudabazaar.com

நீட் தேர்வு சர்ச்சை.. ''உண்மையை மறைக்க பார்க்குறாங்க..'' - சூர்யாவுக்கு ஆதரவாக விளாசும் அமீர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக இயக்குநர் அமீர் பேசியுள்ளார். 

சூர்யாவுக்கு ஆதரவாக பேசும் அமீர் | Director Ameer Exclusive interview on Suriya view on neet exam

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக அமேசானில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

சூர்யாவுக்கு ஆதரவாக பேசும் அமீர் | Director Ameer Exclusive interview on Suriya view on neet exam

இந்நிலையில் நடிகர் சூர்யா அண்மையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இத்தேர்வை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டது அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் நம்மிடம் பேசிய போது கூறியதாவது, ''நடிகர் சூர்யாவின் கருத்துக்களுக்கு விமர்சனம் வரும் காரணம், அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அந்த உண்மை வெளியே தெரியாமல் மறைந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார். 

மேலும் நீட் தேர்வின் போது தாலியை கழட்ட சொன்னவர்கள், பூனூலை கழட்ட வைத்தார்களா..? என்று அமீர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

நீட் தேர்வு சர்ச்சை.. ''உண்மையை மறைக்க பார்க்குறாங்க..'' - சூர்யாவுக்கு ஆதரவாக விளாசும் அமீர். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவுக்கு ஆதரவாக பேசும் அமீர் | Director Ameer Exclusive interview on Suriya view on neet exam

People looking for online information on Ameer Sultan, NEET Exam, Suriya will find this news story useful.