www.garudabazaar.com

’ஷகுந்தலா’வாக ’அழகுப்பதுமை’ சமந்தா... ’தளபதி 66’ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட B’day special Pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Dil raju released shakundala Samantha spectacular pic

Also Read | “இந்தி தேசிய மொழி இல்லை”… “உங்கள் அறியாமை வியப்பாக உள்ளது”… நடிகை திவ்யாயின் வைரல் Tweet!

சமந்தா 2.0

பாணா காத்தாடி மற்றும் மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சமந்தாவுக்கு அடையாளத்தைக் கொடுத்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்புதான். அதன் பின்னர்  பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தன. சமந்தா, தன்னுடன் சில படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தற்போது  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Dil raju released shakundala Samantha spectacular pic

விவாகரத்துக்குப் பின் சினிமா…

சமந்தா விவகாரத்து அறிவிப்புக்குப் பின் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தின் ’ஊம் சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று அவரின் பிறந்தநாள் தினத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Dil raju released shakundala Samantha spectacular pic

ஷகுந்தலம் குழுவின் வாழ்த்து…

இன்று சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகும் புராண திரைப்படமான ஷகுந்தலம் குழுவினர் சமந்தாவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். தளபதி 66 படத்தை தயாரிக்கும் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியான புகைப்படத்தோடு ”வாழ்த்துகள்… மிகத்தூய்மையான ஷகுந்தலாவுக்கு…இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என வாழ்த்தியுள்ளனர்.

Dil raju released shakundala Samantha spectacular pic

சமந்தாவின் PAN INDIA ஷகுந்தலம்..

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது. சமீபத்தின் சகுந்தலம் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அந்த போஸ்டரில் சமந்தா நேர்த்தியான தோற்றத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார். சமந்தா எங்கோ ஆர்வமாகப் பார்க்கிறார், காட்டில் அவருடன் இருக்கும் தோழமைகள் அவரை பிரமிப்புடன் பார்க்கிறார்கள். அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி அமைந்திருந்தது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

’ஷகுந்தலா’வாக ’அழகுப்பதுமை’ சமந்தா... ’தளபதி 66’ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட B’DAY SPECIAL PIC! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dil raju released shakundala Samantha spectacular pic

People looking for online information on Dev Mohan, Dil Raju, Gunasekhar, Samantha, Shaakuntalam Movie will find this news story useful.