www.garudabazaar.com

"முதல் முறையாக மக்கள் பணிசெய்ய".. உதயநிதிக்கு தனுஷ் சொன்ன அசத்தல் வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி அடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

Dhanush wishes Udhayanithi stalin DMK victory in TN Elections

இதேபோல் திமுக இளைஞரணி செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். திரைப்பட ஹீரோவாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற உதயநிதி ஸ்டாலின், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இப்படி அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இதனை குறிப்பிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லி தமது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதுபற்றி தமது ட்விட்டரில் தனுஷ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “” என்று தனுஷ் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியானபோது, கர்ணன் திரைப்படத்தில் திமுக ஆட்சிக் காலம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அது பிழையானது என்றும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியதை அடுத்து, கர்ணன் படத்தில் வரும் அந்த காலகட்ட சிக்கல் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: கர்ணன் படத்தை அடுத்து 'பிரபல மாஸ் ஹீரோவுடன்' கைகோர்க்கும் ரஜிஷா விஜயன்! யார்னு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush wishes Udhayanithi stalin DMK victory in TN Elections

People looking for online information on Dhanush, DMK, DMKforTN, DMKWinsTN, Tamilnadu, TNElections2021, Udhayanidhi Stalin will find this news story useful.