www.garudabazaar.com

Video: சூரரைப் போற்று நாயகி கேரக்டரை நினைவூட்டும் பிரபல சேனலின் புதிய தொடர் இன்று முதல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று.

popular channels new serial reminding soorarai potru heroine

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நிஜக் கதையை தழுவி எடுக்கப்பட்ட இன்ஸ்பிரேஷனலான இந்த திரைப்படம் பெருமளவில் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் நாயகி அபர்ணா பாலமுரளியின் கேரக்டர் மிக முக்கியமானதாக கருதப்பட்டது.

இதுவும் நிஜவாழ்க்கை கேரக்டர்தான் என்பதால் அந்த கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்தது. பொம்மி என்கிற பெயரில் வரும் இந்த கேரக்டர் மிகவும் துணிச்சலாகவும், சுதந்திரமாக பெண்களுக்கு இருந்த அனைத்து பிற்போக்கு தனங்களையும் உடைத்தெறிந்து முற்போக்காக சிந்திக்கும் திறன் உடைய கதாபாத்திரமாகவும் விளங்கியது.

இந்த நிலையில் பிரபல தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் பொம்மி BABL. இதில் வரும் பொம்மி கேரக்டரும் சூரரைப் போற்று பாத்திரத்தின் ஹிட் அடித்த பெயருடன் மட்டுமல்லாமல் அதே போன்று துணிச்சலாகவும் வந்திருக்கிறது. இதன் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த டிரைலரில் எல்லா பழைய சடங்குகளையும் பெண் ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்கும் அந்த பெண் குழந்தை பிற்காலத்தில் பொம்மி பிஏபிஎல் ஆக வருவார் என்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஜீ தமிழில் வெளியான அம்பேத்கர் ஒரு சகாப்தம் தொடர் அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக சமூக ஒடுக்குமுறை மற்றும் அநீதிகளுக்கு எதிராக பேசியது. இந்நிலையில் இதே சிந்தனையுடைய ஒரு பெண்ணின் பார்வையில்  பொம்மி பி.ஏ.பி.எல் வரவிருப்பதால் பலரும் இந்த தொடரை காண ஆவலாக உள்ளனர்.

ALSO READ: 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular channels new serial reminding soorarai potru heroine

People looking for online information on Aparna Balamurali, BommiBABL, ColorsTamil, Soorarai Pottru, Suriya, TVSerial will find this news story useful.