www.garudabazaar.com
iTechUS

"பணம் எப்படி வேணா சம்பாரிக்கலாம்.. ஆனா படிப்புதான்".. 'வாத்தி' தனுஷ் ..மாஸ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Movie Official Trailer Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அமலாபால் தம்பியா இது?.. சகோதரர் பிறந்தநாளில் வேறலெவல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து!

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. 

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் வாத்தி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தனியார் & அரசு பள்ளிகள் குறித்தும் படத்தின் டிரெய்லரில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மீனாட்சி எனும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்துள்ளார். சமுத்திரக்கனி டிரெய்லரில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். கல்வி வியாபார மையமாவதை அடிப்படையாகக் கொண்டு டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

கல்வியில் கிடைக்கும் காசு அரசியலில் கிடைக்காது. "பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும்" என்ற தனுஷ் கதாபாத்திரம் பேசும் வசனத்துடன் டிரெய்லர் நிறைவடைகிறது.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.

Also Read | "சொக்க வைக்கும் குரல்".. விடுதலை படத்தில் தனுஷ் பாடல்.. நன்றி சொல்லி சூரி ட்வீட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie Official Trailer Released

People looking for online information on Dhanush, Vaathi, Vaathi Movie Trailer will find this news story useful.