www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. அதிரடி போஸ்டருடன் வெளியான புதிய ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush Vaathi Movie New Release Date Announced

Also Read | காயத்தில் இருந்து மீண்டு வரும் அருண் விஜய்.. ஜிம்மில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. 

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

Dhanush Vaathi Movie New Release Date Announced

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படத்தின் முதல் சிங்கிள்  "வா வாத்தி" என்ற பாடல் ஸ்வேதா மோகன் குரலில் சிலநாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Movie New Release Date Announced

இந்நிலையில் வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிரடியான போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. பள்ளி வாலிபால் மைதானத்தில் ஆக்ரோஷமான தோற்றத்தில் தனுஷ் வலையை கையில் பிடித்து நிற்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் தனுஷ் நடிப்பில் அடுத்து தயாராகி வருகிறது.

Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் மாஸ் BTS ஸ்டில்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie New Release Date Announced

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Movie, Vaathi will find this news story useful.