www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் இணைந்த பிரபல 'அசுரன்' பட நடிகர்.. வேறமாரி BTS புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் பிரபல அசுரன் பட நடிகர் இணைந்துள்ளார்.

Dhanush Vaathi Movie BTS Image goes Viral on social media

Also Read | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

Dhanush Vaathi Movie BTS Image goes Viral on social media

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இதற்கான ஆரம்ப பட பூஜை ஜனவரியில் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர்.

Dhanush Vaathi Movie BTS Image goes Viral on social media

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ், வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி உடன் எடுத்த படப்பிடிப்பு தள BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும் படத்தில் கென் பணிபுரிவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

Dhanush Vaathi Movie BTS Image goes Viral on social media

கடந்த வருடத்தில் வெற்றிமாறன் இயக்கத்திலான அசுரன் திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய அரசின் தேசிய விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வ்ருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

[2:05 pm, 22/04/2022] BWPichaimuthu: தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் இணைந்த பிரபல 'அசுரன்' பட நடிகர்.. வேறமாரி வைரலாகும் BTS புகைப்படம்

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் இணைந்த பிரபல 'அசுரன்' பட நடிகர்.. வேறமாரி BTS புகைப்படம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie BTS Image goes Viral on social media

People looking for online information on Dhanush, G V Prakash Kumar, Naga Vamsi, Samyuktha Menon, Vaathi Movie, Venky Atluri will find this news story useful.