www.garudabazaar.com

Naane Varuven : தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் "நானே வருவேன்"... இந்தா அறிவிச்சாச்சுல்ல ரிலீஸ் தேதி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும்  'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

Dhanush Selvaraghavan Naane Varuven release date announced

இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Dhanush Selvaraghavan Naane Varuven release date announced

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

Dhanush Selvaraghavan Naane Varuven release date announced

முன்னதாக இப்பட தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, "எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி "நானே வருவேன்" செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீஸர் வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்." என தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Dhanush Selvaraghavan Naane Varuven release date announced

இந்த படத்தின் (ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான) பிரிட்டன் ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகக் கூடிய தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Selvaraghavan Naane Varuven release date announced

People looking for online information on Dhanush, Kalaippuli S Thanu, Naane Varuven, Naane Varuven Posters, Selvaraghavan will find this news story useful.