VTK D Logo Top
www.garudabazaar.com

புது கெட் அப்பில் மரண மாஸ் லுக்கில் தனுஷ்.. கூட இவர் வேற இருக்காரா? வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷின் புதிய லுக் வெளியாகி உள்ளது.

Actor Dhanush New Look Photo with DOP Om Prakash

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது.

தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திருச்சிற்றம்பலம் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படம், இந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இந்த படத்திற்கும் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணிபுரிகிறார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்,  தனுஷூடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் புதிய லுக்கில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Dhanush New Look Photo with DOP Om Prakash

People looking for online information on Dhanush, Naane varuvean, Om Prakash will find this news story useful.