Pattamboochi

"அது தனுஷோட Hit பாட்டா இருக்கும் .. Signature Step இருக்கு .. Reels-ல Trend ஆகும்" - ஜானி மாஸ்டர் ஆரூடம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள் மக்களுக்கு அபிமானவை.

dhanush next hit song Jani master hint BGM 2022

Also Read | "Beast-ல விஜய் கொடுத்த Suprise" - Behindwoods Gold Medal விருது விழாவில் ஜானி மாஸ்டர் நெகிழ்ச்சி

சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது.

dhanush next hit song Jani master hint BGM 2022

இந்நிகழ்வுக்கு வேற லெவலில் வேட்டி கட்டிய தமிழராகவே மாறி வந்திருந்தார் பிரபல தென்னிந்திய முன்னணி நடனக்கலைஞர் ஜானி மாஸ்டர். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் 8வது எடிஷன் வழங்கும்  “சிறந்த நடன இயக்கத்துக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய ஜானி மாஸ்டர், “என்னை அன்பால் அரவணைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... நான் பணியாற்றிய பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆனதற்கு 3 பேர் காரணம்.  முதலாவதாக, நெல்சன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. என்னை நம்பி இந்த பாடல்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.

அதே போல அனிருத் அவர்களுக்கும் மிக்க நன்றி, மற்றும் தனுஷ் சார்.. அவரது இன்னொரு பாடல் வரப்போகிறது. அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு மாதங்களாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த பாடல் ரீல்ஸில் கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகும். அதில் ஒரு சிறு நடன அசைவு அருமையாக இருக்கும், ரொம்ப நன்றாக இருக்கும்.

dhanush next hit song Jani master hint BGM 2022

தமிழ் திரையுலகில் என்னை அழைத்து அறிமுகம் செய்த பிரபுதேவா மாஸ்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. பின்பு ‘ரௌடி பேபி’ தனுஷ் அவர்களுக்கு மிக்க நன்றி. அதே போல சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் விஜய் அவர்களுக்கு என் மகத்தான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

dhanush next hit song Jani master hint BGM 2022

இந்த விருதை நான் 'அரபிக் குத்து' பாடலுக்கு மட்டும் பெறவில்லை. எனது பிற பாடல்களுக்கும் தான் குறிப்பாக 'புட்ட பொம்மா' பாடல். அல்லு அர்ஜுன் என் சகோதரர் போன்றவர். அல்லு அர்ஜுன் சார் நன்றி. இயக்குனர் த்ரிவிக்ரம் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Also Read | "அஜித் & விஜய் ஆட.. ஒரு மாஸ் BGM-ல ரஜினி entry" - Behindwoods விருது விழாவில் ஜானி மாஸ்டர் தெறி..!

"அது தனுஷோட HIT பாட்டா இருக்கும் .. SIGNATURE STEP இருக்கு .. REELS-ல TREND ஆகும்" - ஜானி மாஸ்டர் ஆரூடம்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

dhanush next hit song Jani master hint BGM 2022

People looking for online information on Ajith, Arabic Kuthu, Beast, Behindwoods Awards 2022, Behindwoods Gold Medal Award, Behindwoods Gold Medals, BGM 2022, BGM8, Dhanush, Dhanush 3 movie song, Dhanush three movie song, Jani Master, Rajinikanth, Thalapathy Vijay, Vijay, Why this kolaveri di will find this news story useful.