IRAVIN NIZHAL
www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் வெளியிட்ட புதிய அப்டேட்! வைரல் PHOTO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் புதிய BTS போட்டோவை செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Dhanush Naane Varuven Movie Selvaraghavan Dubbing Photo

Also Read | புது படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் பிரபல இயக்குனர்.. BTS போட்டோவுடன் வெளிவந்த தெறி அப்டேட்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.

Dhanush Naane Varuven Movie Selvaraghavan Dubbing Photo

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

Dhanush Naane Varuven Movie Selvaraghavan Dubbing Photo

சில நாட்களுக்கு முன் நானே வருவேன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தது என தனுஷ் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Dhanush Naane Varuven Movie Selvaraghavan Dubbing Photo

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் "நானே வருவேன்" படத்திற்கு செல்வராகவன் டப்பிங் பேசியுள்ளது போல் புகைப்படம் அமைந்துள்ளது. இதன் மூலம் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது உறுதியாகி உள்ளது.

Also Read | அனுபமா பரமேஸ்வரன் & ரெஜினா இணைந்து நடிக்கும் புதிய படம்.. MUSIC யாரு தெரியுமா? COLOURFUL போஸ்டர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie Selvaraghavan Dubbing Photo

People looking for online information on Dhanush, Naane Varuven Movie, Naane Varuven Movie updates, Selvaraghavan, Selvaraghavan Dubbing Photo will find this news story useful.