www.garudabazaar.com

ஒரு flow-ல ‘செல்லத்த’ கட்டிப்புடிக்கவே போயிட்டாரே!.. யாருப்பா இந்த புது கோமாளி! #CWC3

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை. 02, பிப்ரவரி 2022:- குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3வது சீசன், நாளும் நாளும் செம ஃபன்னாக போகிறது. குறிப்பாக ஒரு அல்டிமேட் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு உண்டான முழுமையான அத்தனை அம்சங்களுடன் சிரிப்புக்கு பஞ்சமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Cook With Comali Season 3 Comali Arun tried to hug Ammu Abirami

குக் மற்றும் கோமாளிகள்..

பிரபல சமையல் சக்ர்வர்த்திகளான செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்  ஆகியோர் நடுவர்களாக திகழும் இந்த நிகழ்ச்சியை விஜே ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் சமைக்கக் கூடிய போட்டியாளர்களாக மனோபாலா, வித்யூலேகா, ஷ்ருதிகா, அம்மு அபிராமி, ரோஷினி ஹரிபிரியன், கிரேஸ் கருணாஸ், ஆண்டனி தாசன், சந்தோஷ் பிரதாப், தர்ஷன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதேபோல் கோமாளிகளாக சிவாங்கி, குரேஷி, பாலா, மணிமேகலை, சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன், சக்தி, சுனிதா, சூப்பர் சிங்கர் பரத், ஷீத்தா கிளாரின், அருண் ஆகியோர் கோமாளியாக இணைந்துள்ளனர்.

Also Read: நடிகர் விமல்.. சைலண்ட்டா ஒரு சம்பவத்த பண்ணிருக்காரே!.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!

அருணும், அம்மு அபிராமியும்..

இதில் அருணும், அம்மு அபிராமியும் சமைத்ததை எடுத்து வந்து நடுவர்கள் முன் வைத்து விளக்க, அப்போது அருண் செய்த கோமாளித்தனங்களை கண்டு, கடுமையாகவும் சீரியஸாகவும் திட்டுவது போல் செஃப் தாமோதரன் கொஞ்ச நேரம் பிராங்க் செய்து அவரை கதிகலங்க வைத்துவிட்டார். ஆனால் உண்மையில் அருண் சற்றே நிலைகுலைந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல், இயல்பாக அதே சமயம் முகம் வாடியபடி பேசினார். இறுதியில் எழுந்து சென்று அருணை அடிக்க செல்வது போல் சென்ற செஃப் தாமு, அருணை கட்டிக்கொண்டார்.

அபிராமியை கட்டிப்பிடிக்க சென்ற அருண்

இதனைத் தொடர்ந்து கோமாளி அருண், செஃப் தாமுவின் செல்லமான கலாய்ப்பை புரிந்துகொண்டு பாசமாக கட்டிப்பிடிக்க சென்றதுடன், தன்னுடன் சமைத்துக் கொண்டிருந்த குக் அபிராமியையும் ஒரு ஃப்ளோவில் கட்டிப் பிடிக்கச் சென்றுவிட்டார். உடனே அங்கிருந்த பாலா உள்ளிட்ட அனைவருமே அவரை தடுத்து பிடித்து இழுத்துக் கொண்டு பின்னோக்கி நகர்த்திச் சென்றிருக்கின்றனர்.

அப்போது காமெடியன் குரேஷி, “இதுதான் தாமு அய்யா..  நீங்கள் என்கரேஜ் பண்ணினால், இவர்கள் இப்படித்தான் அட்வான்டேஜ் எடுப்பார்கள்!” என்று அருணை கலாய்க்கிறார். இப்படியாக கோமாளிகள் கலகலப்பாக இந்த நிகழ்ச்சியை தற்போது எடுத்துச் செல்கின்றனர்.

புகழ் எண்ட்ரி

இந்த நிகழ்ச்சியில் தற்போது புகழ் மீண்டும் எண்ட்ரி கொடுக்கக் கூடிய புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே மக்கள் அதிகம் மிஸ் பண்ணுவது புகழை தான். அவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் முழுமையாக ஈடுபட முடியாவிட்டாலும் அவ்வப்போது வந்து செல்வார் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடித்த சபாபதி, குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் புகழ். தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் புகழ்,  தற்போது வரும் பிப்ரவரி 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் ஒளிபரப்பாக கூடிய குக் வித் கோமாளி எபிசோடுகளில் கலந்து கொள்கிறார். அது தொடர்பான புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: கேள்வியால் வேலி போட்ட ஜூலி! ‘உங்க மேல அட்டென்ஷன் வரணும்னு செய்றீங்க!’.. அசராமல் அடிக்கும் அனிதா!

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Season 3 Comali Arun tried to hug Ammu Abirami

People looking for online information on Cook with comali 3, Cook With Comali 3 Pugazh, Cook With Comali Season 3, Cook with comali season 3 promo will find this news story useful.