"ஷிவாங்கிய நான் First time பார்த்த பொழுது அப்படி நெனச்சேன் ஆனா"... வைரலாகும் அஸ்வின் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாளுக்கு நாள் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டேதான் போகின்றனர். கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் களை கட்டுகிறது என்று சொல்லலாம். அதிலும் முக்கியமாக ஷிவாங்கி அஸ்வினுக்காக செய்யும் குறும்புகள் செம வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஷ்வின் சமீபத்தில் லைவ் வந்துள்ளார். அப்போது அவரிடம் ஷிவாங்கி பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

cook with comali ashwin on live செம வைரலாகும் அஸ்வின் பதிவு

அவர் கூறும் பொழுது "அங்கிருக்கும் அனைத்து கோமாளிகளுமே கியூட் தான். அதிலும் ஷிவாங்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் ஸ்வீட்டான ஒரு நபர். எப்பொழுதுமே துறுதுறுவென்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார். முதல் முறையாக அவரைப் பார்த்த பொழுது இவர் உண்மையிலேயே இப்படித்தானா இல்லை இங்கு தான் இப்படி இருக்கிறாரா என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் புரிந்தது. அவரது குணமே அதுதான். தானும் சிரித்து கொண்டு மற்றவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ஷிவாங்கி மாதிரி ஒரு கேரக்டரை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

cook with comali ashwin on live செம வைரலாகும் அஸ்வின் பதிவு

மேலும் புகழ் பற்றி கேட்ட பொழுது "உண்மையில் சொல்லவேண்டுமென்றால் அவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர். ஒருநாள் முழுக்க குக் வித் கோமாளி ஷூட்டிங் நடைபெறும். நாங்கள் யார் சோர்வடைந்தாலும் அவர் சோர்வடையவே மாட்டார். எங்களது சோர்வை பாதி நீக்குவதே அவர்தான். குக் வித் கோமாளி செட் அவ்வளவு கலகலப்பாக இருக்கிறது என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் புகழ்தான். புகழுக்கு உங்களது அன்பை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இருங்கள். அவன் யாரும் தொட முடியாத உயரத்துக்குப் போவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அவனைப் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Tags : Ashwin

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

cook with comali ashwin on live செம வைரலாகும் அஸ்வின் பதிவு

People looking for online information on Ashwin will find this news story useful.