www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் "கோப்ரா" ரிலீஸ் தேதி இது தான்! இயக்குனர் வெளியிட்ட OFFICIAL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'விக்ரம்' நடிக்கும் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து ரிலீஸ் தேதியை தோராய திட்டமாக அறிவித்துள்ளார்.

Cobra Movie Release Date Announced by Ajay Gnanamuthu

சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

Cobra Movie Release Date Announced by Ajay Gnanamuthu

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே (ஜனவரி -5,2022) படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cobra Movie Release Date Announced by Ajay Gnanamuthu

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் டிவிட்டரில் அறிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியாக மே மாதம் 26 ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie Release Date Announced by Ajay Gnanamuthu

People looking for online information on Ajay Gnanamuthu, கோப்ரா, Cobra, Cobra Release, Vikram will find this news story useful.