www.garudabazaar.com

புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் விஜய்.. பூஜை செய்து உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர் : கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

vijay pays homage to kannada power star appu puneet rajkumar

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கடந்த ஆண்டு  (29.10.2021) அன்று உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  அன்றே காலமானார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தனர்.  பின் புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை நடிகர் ராஜ்குமார் சமாதிக்கு அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இதில் அரசியல், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

vijay pays homage to kannada power star appu puneet rajkumar

அதிலும் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின், அல்லு அர்ஜூன், கமல் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் பின்னர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

vijay pays homage to kannada power star appu puneet rajkumar

கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்டார் புனித், இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

vijay pays homage to kannada power star appu puneet rajkumar

சேத்தன் குமார் எழுதி இயக்கிய ஜேம்ஸ், கடந்த ஆண்டு அக்டோபரில் புனித் அகால மரணம் அடையும் முன் கடைசியாக நடித்த படம். இந்த படம்  புனித்தின் பிறந்தநாளுக்கு மார்ச் 17,2022 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அனு பிரபாகர், ஸ்ரீகாந்த், ஆர். சரத்குமார், திலக் சேகர், மற்றும் முகேஷ் ரிஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

vijay pays homage to kannada power star appu puneet rajkumar

People looking for online information on Puneet Rajkumar, Vijay will find this news story useful.